உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஸ் கிளப்பில் வேலையிழந்த 40 பேர் சூழல் பூங்காவில் வேலை கேட்டு மனு

ரேஸ் கிளப்பில் வேலையிழந்த 40 பேர் சூழல் பூங்காவில் வேலை கேட்டு மனு

ஊட்டி;ஊட்டி குதிரை பந்தயம் மைதானம் மூடப்பட்டதால், அங்கு பணியாற்றிய, 40 பேர் புதிதாக உருவாக்கப்படும் தோட்டக்கலை துறை பூங்காவில் பணி ஒதுக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், 2001-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட குத்தகை தொகை, 822 கோடி ரூபாய் செலுத்தாததால் கோர்ட் உத்தரவின் பேரில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தை வருவாய்த்துறை மீட்டு சமீபத்தில் 'சீல்' வைத்தனர்.ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், 40 பேர் பணியிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குதிரை பந்தய மைதான இடத்தில் தற்போது தோட்டக்கலைத்துறை பூங்கா உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பூங்காவில் தங்களுக்கு பணி ஒதுக்க வலியுறுத்தி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில், 'கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தோம். திடீரென்று பல்வேறு காரணங்களால் குதிரை பந்தயம் மைதானம் 'சீல்' வைக்கப்பட்டதால் எங்களுக்கு பணி இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் அங்கு உருவாக்கப்படும் சூழல் பூங்காவில் பணி வாய்ப்புகள் வழங்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி