மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
1 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
1 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
கூடலுார்: கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் மைசூரு சாலையில், உள்ள டாஸ்மார்க் கடையில் இருந்து ஒருவர் அதிக மது பாட்டில் வாங்கி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், கூடலுார் புளியாம்பாறையை சேர்ந்த விநாயகமூர்த்தி, 27, என்பவர், 75 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கி மறைத்து எடுத்து செல்வது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.விசாரணையில், 'தேர்தலை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால், வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக அவைகளை வாங்கி சென்றார்,' என, தெரியவந்தது. விசாரணை நடந்து வருகிறது.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago