மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
23 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
23 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
23 hour(s) ago
ஊட்டி,- ஊட்டியில் வரும், 21ம் தேதி திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு, ஒரே இடத்தில், ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பொருட்டு, மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகள் சார்பில் வரும், 21ம் தேதி, கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.இம்முகாமில், மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சுயத்தொழில் துவங்க மானிய தொகை, கல்வி உதவித் தொகை, சுய உதவி குழு பயிற்சி, இலவச தையல் இயந்திரங்கள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஸ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட சேவைகளை பெற உரிய சான்று ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago