உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை பாதையில் கார் கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக தப்பிய மூன்று பேர்

மலை பாதையில் கார் கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக தப்பிய மூன்று பேர்

குன்னுார் : குன்னுார் மலை பாதையில், 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக மூன்று பேர் உயிர் தப்பினர்.குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து அவ்வப்போது மேகமூட்டமும் நிலவுகிறது. அதில், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடும் மேகமூட்டம் நிலவி வருவதால் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது.இந்நிலையில், ஊட்டி அருகே அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்த சபரீஷ் என்பவர் உறவினர்கள் இருவருடன் காரில் கோவைக்கு சென்று, நேற்று முன்தினம் நள்ளிரவு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நந்தகோபால் பாலம் அருகே, 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. காரில் இருந்த பலுான் திறக்கப்பட்டதால், மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மூவரையும் அவ்வழியாக வந்த டிரைவர்கள் மற்றும் போலீசார் மீட்டு, குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேகமூட்டம் காரணமாக சாலை தெரியாததால் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை கிரேன் மூலம் கார் பள்ளத்திலிருந்து இருந்து மீட்கப்பட்டது. போலீசார் கூறுகையில், 'மலைப்பாதையில் மேகமூட்டம் மற்றும் கனமழையின் போது வாகனங்களை மித வேகத்திலும் கவனமாகவும் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ