உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் அருகே வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

பந்தலுார் அருகே வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை

பந்தலுார்;பந்தலுார் அருகே வாழவயல் பகுதியில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது.பந்தலுார் அருகே குந்தலாடி மற்றும் அதனை ஒட்டிய வாழவயல் பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மாலை, 7:00 மணிக்கு மேல் யானைகளின் பிரச்னை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பள்ளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், வாழவயல் பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு வளர்ப்பு நாய் படுத்திருந்துள்ளது. நள்ளிரவில் அங்கு வந்து சிறுத்தை நாயை கவ்வி தூக்கி சென்றது. இந்த காட்சிகள் அவரது வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூறுகையில், 'சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ