உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊருக்குள் நுழைந்த சிறுத்தை; தேடும் வனத்துறை

ஊருக்குள் நுழைந்த சிறுத்தை; தேடும் வனத்துறை

கூடலுார் : கூடலுார் பொன்வயல் அருகே, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊருக்குள் சுற்றி வரும் சிறுத்தையை, வன ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்து தேடி வருகின்றனர்.கூடலுார் தேவர்சோலை அருகே, பொன்வயல் கிராமத்தில் சுனில் என்பவன் வீட்டின் அருகே, நேற்று முன்தினம், சிறுத்தை ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். மனிதர்களை கண்டால் ஓடி மறைந்து விடும் சுபாவம் உள்ள சிறுத்தை, அங்கிருந்து மெதுவாக நடந்து சென்றது. மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையில், வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சிறுத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த சிறுத்தை நேற்று காலை பாலம்வயல் பகுதியில் தனியார் தேயிலை தோட்ட சாலையை கடந்து சென்றதை மக்கள் பார்த்தனர். தொடர்ந்து, வன ஊழியர்களுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடை அணிந்து தேயிலை தோட்டத்தில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை தாக்கும் ஆபத்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை உணவு தேடி அப்பகுதிக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. அதனை தேடும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பார்த்த சிலர், அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, நடந்து செல்ல சிரமப்பட்டதாக தெரிவித்தனர். அது தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம். இப்பகுதிமக்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்