உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆவின் மோ।ர் விலையை குறைக்க கோரிக்கை

ஆவின் மோ।ர் விலையை குறைக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்;மோரை பெட் வாட்டர் பாட்டிலில் விற்பதற்கு பதிலாக குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் சதீஸ்குமார் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் மோர் விற்பனையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆவின் மோரை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆனால் ஆவின் மோர் சிறிய ரக பெட் வாட்டர் பாட்டில்களில் வருவதால், விலை அதிகமாக உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தனியார் மோர் பாக்கெட்களை வாங்குகின்றனர்.தனியார் பாக்கெட் மோர் ரூ.6 மட்டுமே. ஆனால் ஆவின் மோர் பெட் பாட்டில் ரூ.12 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கோடை வெயிலில் ஏழை மக்களின் தாகத்தை தணிக்க, உடனடியாக பாக்கெட்டுகளில் மோர் அடைத்து விற்பனை செய்வதற்கு ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ