உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை

வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற காட்டு யானை

கூடலுார்;கூடலுார் ஓவேலி அருகே காட்டு யானை வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற சம்பவத்தில் வன ஊழியர்கள் உயிர் தப்பினர்.கூடலுார், ஓவேலி எல்லமலை அருகே லைன்காடு பகுதியில், காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் 4 வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, அங்கு சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த யானை திடீரென வன ஊழியர்கள் சென்ற வாகனத்தை தாக்க முயன்றது. வாகனத்தில் இருந்த வன ஊழியர்கள் ஹாரன் ஒலி எழுப்பியும், சப்தமிட்டனர்; யானை திரும்பி சென்றது. இதனால், வன ஊழியர்கள் உயிர்தப்பினர். இச்சம்பவம் ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை