| ADDED : மார் 26, 2024 01:35 AM
நிருபர்களிடம், மத்திய இணையமைச்சர் முருகன் கூறியதாவது:நீலகிரியில் தேயிலை, மனித-விலங்கு மோதல் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டி பொறுத்த வரைக்கு தொழில் வளர்ச்சி பகுதியாக வர வேண்டும். இங்கிருந்து அதிகமான இளைஞர்கள் ஐ.டி., வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்த பகுதியில் ஐ.டி., பார்க் வந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று பொதுமக்களின் கோரிக்கையாகும். நிச்சயமாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடந்த, 10 ஆண்டுகளாக மத்திய அரசு சுற்றுலா மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா 'ஆப்' மற்றும் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் ஏற்படும் நிலச்சரிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஊழலுக்கு எதிராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்கள் எல்லாம் மோடியின் பக்கம் தான் உள்ளனர்.2 ஜி வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை விரைவில் வர வாய்ப்புள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்காளர்கள் நியாயமாக ஓட்டளிக்க வேண்டும். 10 ஆண்டு கால பா.ஜ.,வின் வளர்ச்சியை பார்த்து ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.