மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
ஊட்டி:நீலகிரி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. கல்லுாரி நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வேட்பாளர்களின் முகவர்களை தவிர, யாரையும் அனுமதிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்பவர்கள், அவர்களுடைய ஆதார் அட்டையை காட்டிய பின்பு அனுமதிக்கப்பட்டனர்.அந்தந்த சட்டசபை தொகுதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்பு, கொட்டும் மழையிலும், தோல்வியடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் சோகத்துடன் வெளியே வர துவங்கினர். தொடர்ந்து, கூடாரத்தில் கடும் குளிரில் முகவர்கள்; போலீசார் காத்திருந்தனர். ஆரம்ப முதலே, தி.மு.க., வேட்பாளர் ராஜா, கூடுதல் ஓட்டுகள் பெற்று வந்த நிலையில், ஆறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, தி.மு.க.,வினர் எம்.பி., அலுவலகத்தில் குவிந்தனர். மாலை நேரத்தில் கூட்டம் அதிகமானதால், அவர்கள் கொண்டு வந்த வாகனங்கள் சாலையின், இரு புறமும் அணி வகுத்து நின்றன. இதனால், அரசு டாஸ்மாக் கிடங்கு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025