மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
27 minutes ago
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
29 minutes ago
பந்தலுார் : பந்தலுார் அருகே சேலக்குன்னா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகந்தராஜா. இவர் பாக்கு, வாழை, காபி விவசாயம் செய்து வருகிறார். இவரின் தோட்டத்திற்கு வந்த யானை கூட்டம், பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள சேதப்படுத்தியது. அதில், 20-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ச்சியாக, இந்த பகுதிக்கு யானைகள் வந்து செல்வதால், விவசாயம் செய்ய முடியாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாலை, 6:00 மணிக்கு மேல் இந்த பகுதிக்கு யானைகள் வந்து விடுவதால், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு சென்று வரவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, யானையால் பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
27 minutes ago
29 minutes ago