உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தரிசு நில விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

தரிசு நில விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

அன்னூர், - தரிசு நில மேம்பாடு திட்டத்தில் பங்கேற்க, விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், அன்னூர் வட்டாரத்தில், பசூர், காரேகவுண்டம் பாளையம், குப்பேபாளையம், குன்னத்தூர் ஆகிய நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தில், தரிசு நிலங்களை பயிர் சாகுபடிக்கு கொண்டு வரும் பொருட்டு, 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களில் குறைந்தபட்சம் எட்டு விவசாயிகள் உள்ள தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு, இலவசமாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் இணைப்புடன் மின்மோட்டார் பொருத்தி சொட்டு நீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது.முட்புதர்களை அகற்றி, நிலத்தை சமன் செய்து, செயல் விளக்க திடல் அமைத்தல், மரக்கன்று நடுதல் ஆகியவை மானியத்தில் செய்து தரப்படுகிறது.இத்திட்டத்தின் செயல்பாடுகளை வேளாண் துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) விஜய கல்பனா நேற்று முன்தினம் பசூரில் ஆய்வு செய்தார்.ஆய்வில் வேளாண் உதவி இயக்குனர் பிந்து பேசுகையில்,'' தேர்வு செய்யப்பட்ட நான்கு ஊராட்சிகளில், விளைநிலங்களாக கொண்டுவர ஒரு எக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.ஆர்வமுள்ளோர் அன்னூர் வேளாண் விரிவாக்க மையம் அல்லது கணேசபுரம் துணை வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். உழவன் செயலிலும் பதிவு செய்யலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை