உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு தீவிரம்

ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடு தீவிரம்

ஊட்டி:ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி, 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த, 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டது. பூங்காவில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என, பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துள்ளது. மேலும், கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன், 2 இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளதோடு, அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ரோஜா மலர்களை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர். இங்கு ரோஜா கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நடப்பாண்டு ரோஜா கண்காட்சி இம்மாதம், 10 ம் தேதி துவங்கி, 19 ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. ரோஜா கண்காட்சிக்கான அனைத்து பணிகள் தயார்படுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை