உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க குன்னுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க குன்னுாரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குன்னுார்;கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வகையில், குன்னுார் பகுதிகளில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.குன்னுார் போலீசார் சார்பில், 30 வார்டுகளிலும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.டி.எஸ்.பி., குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் எஸ்.ஐ., கனகராஜ் மற்றும் போலீசார் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குன்னுார் காந்திபுரம், இந்திரா நகர், ஓட்டுபட்டறை மார்க்கெட். ராஜாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல, குரும்பாடி பழங்குடியின கிராமம், வெலிங்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.நிகழ்ச்சியில் வருவாய் துறையினரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை