உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கூடலுாரில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கூடலுாரில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

கூடலுார்:கூடலுார் மக்களை பாதிக்கும், யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை துவங்கி உள்ளனர்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மனித- யானை மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தவிர்க்க, தமிழக அரசு சார்பில் யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில், மாநில வனத்துறையின் சிறப்பு குழு சார்பில், 42 யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, யானைகள் வழித்தட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது. 'இது குறித்து பொதுமக்கள் இணையதளம் வாயிலாக ஆலோசனை கருத்துக்களை தெரிவிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், கூடலுாரில் குறிப்பிட்டுள்ள மூன்று யானை வழித்தடங்களில், பெரும்பாலான பகுதி மக்கள் வாழ்விடங்களுக்குள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், வரைவு அறிக்கையை ரத்து செய்ய, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில், வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, 'வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டுவது,' என, முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கூடலுார், ஓவேலி, மசினகுடி, ஸ்ரீமதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் முன் நேற்று முதல் கருப்பு கொடி கட்டி, திட்டத்தை ரத்து செய்ய மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை