உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மளிகை பொருள் வாங்க ரேஷன் கடையில் வற்புறுத்தல்

மளிகை பொருள் வாங்க ரேஷன் கடையில் வற்புறுத்தல்

அன்னுார் : 'ரேஷன் கடையில், மளிகை பொருள் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர்,' என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஜீவா நகர், அழகாபுரி நகர், ஆதவன் நகர், ஆயிமா புதூர் மற்றும் ஒட்டர் பாளையம் பகுதி மக்களுக்கு ஒட்டர்பாளையத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் செயல்படும் பகுதிநேர ரேஷன் கடை உள்ளது.இப்பகுதி ரேஷன் கார்டு தாரர்கள் கூறுகையில்,'ஒட்டர்பாளையம் ரேஷன் கடைக்கு ரேஷன் பொருள் வாங்க செல்லும்போது ஏதாவது ஒரு மளிகை பொருள் வாங்கும்படி வற்புறுத்துகின்றனர். டீ தூள், சம்பா ரவை உள்ளிட்ட ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.சில சமயம் ரேஷன் பொருளுக்கு மட்டுமே பணம் இருக்கும். மளிகை பொருள் வாங்க பணம் இருக்காது. வற்புறுத்துவதால் சிரமத்திற்கு உள்ளாக வேண்டி உள்ளது,' என புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ