உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மூடம் போட்டால் நீர் ஆவியாவதை தடுக்கலாம்

மூடம் போட்டால் நீர் ஆவியாவதை தடுக்கலாம்

சூலுார் : 'மூடம் போடுவதால், நீர் ஆவியாதை தடுக்கலாம்,'என, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. மூடம் போடுதல் குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:நீர் ஆவியாவதை தடுக்கவும், பூமியில் வெப்ப நிலை அதிகமாவதை தடுக்க மூடம் போடுதல் சிறந்த முறையாகும். வைக்கோல், சோளத்தட்டை, கம்பு தட்டை, கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் கிடைக்கும் மஞ்சி மற்றும் பாலிதீன் விரிப்புகளை கொண்டு மூடம் இடலாம். அதேபோல், தென்னை மட்டை, பன்னாடை போன்ற கழிவுகளை தோப்பிலிருந்து அகற்றாமல் இருப்பது நல்லதாகும். மேலும், மழைக்காலத்தில் மண்ணை அகற்றி, தேங்காய் மட்டையை நார் பகுதி கீழே இருக்குமாறு புதைத்து வைப்பதன் மூலம் பூமியில் நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்கலாம். கரும்பு பயிரை வறட்சியில் இருந்து காப்பாற்ற, அவ்வப்போது அகற்றும் சோகைகளை செலவில்லாமல் நிலத்தில் பரப்புவதால், ஈரப்பதத்தை தாங்கும் சக்தி அதிகரிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி