உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாழை தோட்டம் பாதிப்பு விவசாயிக்கு பெரும் நஷ்டம்

வாழை தோட்டம் பாதிப்பு விவசாயிக்கு பெரும் நஷ்டம்

பந்தலுார்:பந்தலுாரில் காட்டு யானைகளால் வாழை தோட்டம் சேதமடைந்தது.பந்தலுார் அருகே குந்தலாடி அருகே பன்னிப்புழா பகுதிக்கு வந்த மூன்று யானைகள், பாபு என்பவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்தன. 700 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை, உணவாக்கி சேதப்படுத்தின.இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை தார்கள், முழுமையாக யானைகளால் சேதப்படுத்தப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், ''தோட்டக்கலை துறையினர் நிவாரணம் வழங்கினால் பயனாக இருக்கும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை