உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்சாரம் தாக்கி முதியவர் பலி

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், குழல்மன்னம் நொச்சுள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலமணி, 73, பால் பண்ணை நிர்வகித்து வந்தார். இவர், நேற்று காலை, 5:50 மணியளவில் கூட்டுறவு பால் சங்கத்துக்கு, பால் அளந்து அளிப்பதற்காக சென்றபோது, தாழ்வாக கிடந்த மின் இணைப்பு கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்து வந்த குழல்மன்னம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே, உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி