உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காட்டன் ரீலீங் தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பஞ்சு தூசுகளால், சுற்றுப்புற சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது. தொழிற்சாலையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம், பாம்பே நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.இது குறித்து, மனுதாரர்கள் ஜீவானந்தம் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் கூறுகையில்,கடந்த, 9 மாதமாக இப்பகுதியில் தனியார் மில் இயங்கி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் காற்று மாசு காரணமாக, வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. குழந்தைகள் படிக்க முடியவில்லை. இது குறித்து, தமிழ்நாடு அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மில் மீது குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி