மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
19 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
19 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
19 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தரைதளத்தில் நேற்று திடீரென தீ பற்றியது. தேயிலை துாள் உலர் இயந்திரத்தில் இருந்து தீ பரவி வெளியில் இருந்த பொருட்கள் மீது தீ பற்றியது. உடனடியாக கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததால், லேசான தீ கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், நேற்று பராமரிப்பு பணி மட்டுமே நடந்ததால், தொழிலாளர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.விபத்து குறித்து எருமாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago