உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

பெ.நா.பாளையம்: பஸ் பயணத்தின் போது பெண்ணிடம் தங்க செயின் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி,58. இவர் தனியார் கல்லூரி ஹாஸ்டலில் சமையல் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவில் இருந்து கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். அப்போது பாக்கியலட்சுமி கழுத்திலிருந்து, 3 பவுன் எடை உள்ள தங்க சங்கிலியை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை