உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளி கட்டடம் சேதம்: சீரமைப்பு பணி தீவிரம்

அரசு பள்ளி கட்டடம் சேதம்: சீரமைப்பு பணி தீவிரம்

கோத்தகிரி;கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர், மழையில் இடிந்து விழுந்ததை அடுத்து, சீரமைப்பு பணி நடந்து வருகிறது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில், பெரும்பாலான நிலங்கள் ஈரம் கண்டுள்ளன. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, பகலில் இடியுடன் பெய்த கன மழையில், கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பள்ளி அருகே அமைந்துள்ள 'சேட்லைன்' மற்றும் காவலர் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரி வருவாய் துறையினர் ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன், சாலையில் விழுந்த கற்கள் மற்றும் மண் குவியலை அப்புறப்படுத்தினர். இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது, புதிதாக தடுப்புச் சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை