உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கலை கல்லுாரியில் 23ல் கலந்தாய்வு இளநிலை பாடப்பிரிவு சேர வாய்ப்பு

அரசு கலை கல்லுாரியில் 23ல் கலந்தாய்வு இளநிலை பாடப்பிரிவு சேர வாய்ப்பு

ஊட்டி:ஊட்டி அரசு கலை கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான, இனச்சேர்க்கை மற்றும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும், 23ம் தேதி நடக்கிறது.கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஊட்டி அரசு கலை கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து, இடம் கிடைக்காத மாணவ, மாணவியர், வரும், 23ம் தேதி காலை, 9:30 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லுாரியில் சேரலாம்.இன சுழற்சி மாறுதல் அடிப்படையில், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், வணிகவியல், வணிகவியல் (சி.ஏ.,) வணிகவியல் (ஐ.பி.,), இயற்பியல், வேதியல், மின்னணுவியல், தாவரவியல், விலங்கியல், வனவிலங்கு உயிரியல், புவியமைப்பியல் கணிதவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய, 18 துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.'10ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்று சான்று, சாதி சான்று, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்கம்,' என, அசல் மற்றும், 6 நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு, 5 புகைப்படம் கொண்டு வர வேண்டும்.மாநில பாடத்திட்டத்திற்கு, 4,500 ரூபாய், இதர பாடத் திட்டத்திற்கு, 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ