உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாகுபலி யானையை பிடிக்காவிட்டால் வனத்துறை அலுவலகம் முற்றுகை

பாகுபலி யானையை பிடிக்காவிட்டால் வனத்துறை அலுவலகம் முற்றுகை

மேட்டுப்பாளையம், - பொது மக்களால் பாகுபலி என அழைக்கப்படும் ஆண் யானை, கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறு எங்கும் செல்லாமல், மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் மட்டுமே சுற்றி வருகிறது. இந்த யானை மனிதர்களை, தொந்தரவு எதுவும் செய்வதில்லை. ஆனால் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையம் அருகே குரும்பனூரில், சரவணன் என்ற விவசாய நிலத்தில், இந்த ஆண் யானை புகுந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள, வாழை மரங்களை சேதப்படுத்தியது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் கூறியதாவது: பாகுபலி யானையால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடும்படி, பலமுறை மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.இனியும் இதே நிலை தொடர்ந்தால் மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகம் முன்பு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ