உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கேரளா நிபா வைரஸ் பாதிப்பு எல்லையில் தீவிர பரிசோதனை

கேரளா நிபா வைரஸ் பாதிப்பு எல்லையில் தீவிர பரிசோதனை

கூடலுார்:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பகுதியில், நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு கோழிக்கோட்டில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். தொடர்ந்து, கேரள சுகாதார துறையினர் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்து வருகின்றனர்.நிபா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், கூடலுாரை ஒட்டிய தமிழக - கேரள எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு, கேரளாவிலிருந்து வரும் பயணியருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், நீலகிரிக்குள் அனுமதித்து வருகின்றனர்.இதை தவிர, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள பழக்கடைகளில், பறவைகள், வவ்வால் கொத்திய பழங்கள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை