உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிம்ம வாகனத்தில் கரிவரதராஜ பெருமாள்

சிம்ம வாகனத்தில் கரிவரதராஜ பெருமாள்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில்,19ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழாவையொட்டி சிம்ம வாகனத்தில் கரி வரதராஜ பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். இன்று, 22ம் தேதி அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, கருட வாகனம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், பரிவேட்டை, சேஷ வாகனம், தெப்ப தேர் நடக்கிறது. 28ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி, சாற்று முறை நடக்கிறது. விழாவை ஒட்டி தினமும் மதியம் திவ்ய பிரபந்த சேவா காலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ