உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

கூடலுார்;கூடலுார் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' செயலி குறித்து மகளிர் போலீசார் விழிப்புணர் ஏற்படுத்தினர்.காவல்துறை சார்பில் 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' செயலி, அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதில், பொது மக்களுக்கு எதிராக குறிப்பாக பெண்கள், முதியோர்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுத்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தி வருகின்றனர். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இச்செயலி குறித்து, கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் சார்பில், ஏழுமரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி, 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' செயலியின் பயன்கள் அதனை செயல்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். போலீசார் புஷ்பாலீலா, கவுரி, மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ