உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்

கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர்

கோத்தகிரி:கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாக தடுப்புச்சுவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால், பிரதான சாலையில் இருந்து, அலுவலக வளாகத்திற்குள், அலுவலர்களின் வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக, வருவோரின் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், கட்டுமான பொருட்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால், இடையூறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்யும் பட்சத்தில், பகுதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில், தற்போது எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முழுக்க 'கான்ரீட்' தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோடை விழா நடந்துவரும் நிலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், இப்பணியை, மழை தீவிரடைவதற்கு முன், விரைந்து முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை