மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
10 minutes ago
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
12 minutes ago
குன்னுார்;குன்னுாரில் நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மணி கணக்கில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.குன்னுாரில் நேற்று மதியம், 2:00 மணி முதல் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக லெவல் கிராசிங் பகுதியில் இருந்து பாலவாசி வரையிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன. இதேபோல மவுண்ட் ரோட்டிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ஆட்டோக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் குறிப்பிட்டு நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். போக்குவரத்து போலீசார் நெரிசலை சீர்படுத்தியபோதும் மாலை, 5:00 மணிக்கு மேலும் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படுவதையொட்டி பொருட்களை வாங்க பெற்றோர் திரண்டதாலும். சமவெளிப் பகுதிகளுக்கு சென்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் டவுன் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல, குன்னுார் அருவங்காடு எல்லநள்ளி உட்பட பல்வேறு பகுதிகளிலும் அரசு பஸ்களுக்காக, நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்து மேட்டுப்பாளையம் உட்பட சமவெளி பகுதிகளுக்கு நின்று கொண்டே பயணம் செய்தனர்.
10 minutes ago
12 minutes ago