உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி அருகே மண் சரிவு; அச்சத்தில் மக்கள்

ஊட்டி அருகே மண் சரிவு; அச்சத்தில் மக்கள்

ஊட்டி : ஊட்டி அருகே இத்தலார் கிராமத்தில், குடியிருப்பை ஒட்டி ஏற்பட்ட பெரியளவிலான மண் சரிவால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடரும் மழையால், ஊட்டி அருகே இத்தலார் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில், 30 அடி உயரத்துக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் ஏற்பட்ட மண்சரிவால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ' இத்தலார் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த இரு ஆண்டுக்கு முன்பு இதே போன்று பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டதால், குடியிருப்புகளுக்கு தற்போது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.இதனால், இப்பகுதியில் புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ