மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
9 hour(s) ago
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
9 hour(s) ago
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
9 hour(s) ago
ஊட்டி;ஊட்டியில் பெய்த கன மழையின் போது, நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்று முன்தினம் தீவிரமடைந்தது. அதில், ஊட்டி நகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட, கீழ் தலையாட்டிமந்து பகுதியில், மண்சரிவு ஏற்பட்டு நடைபாதை சேதம் அடைந்தது.இதனால், பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இரவு நேரத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த, ஊட்டி வருவாய்த்துறையின் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் வசிக்கும் எட்டு குடும்பங்களை பத்திரமாக மீட்டு, அங்குள்ள அரசு பள்ளி நிவாரண முகாமில் தங்க வைத்தனர். மக்கள் கூறுகையில், 'இனிவரும் நாட்களில் மழை தீவிரமடையும் பட்சத்தில், இங்குள்ள மக்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், நகராட்சி நிர்வாகம், போர் கால அடிப்படையில் நடைபாதை வசதி ஏற்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago