உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் சாலையோரம் மண்சரிவு விழும் நிலையில் குடியிருப்புகள்

பந்தலுாரில் சாலையோரம் மண்சரிவு விழும் நிலையில் குடியிருப்புகள்

பந்தலுார் : பந்தலுார் அருகே சாலையோர மண்சரிவால் விழும் நிலையில் குடியிருப்புகள் உள்ளன. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டி தீர்த்தது. அதில், பல்வேறு பகுதிகளிலும் மண் சரிவு மற்றும் மழைவெள்ளம் புகுந்து விவசாய தோட்டங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன.அதில், பெரும்பாலான கிராம பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் மண்சரிவு ஏற்பட்டு, குடியிருப்புகள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. இந்நிலையில். பந்தலுாரில் இருந்து கூடலுார் செல்லும் நெடுஞ்சாலையில் ரிச் மவுன்ட் பகுதியில் தனியார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்புகள் சாலையை ஒட்டிய, மேல்பகுதியில் அமைந்துள்ளன. மழையின் காரணமாக சாலையோரம் ஏற்பட்ட மண்சரிவில், அங்கு கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் முழுமையாக இடிந்து விழுந்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மண்ணரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே, நெடுஞ்சாலைத்துறை இப்பகுதியில் ஆய்வு செய்து தடுப்பு சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ