உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி

கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி

கோத்தகிரி;கோத்தகிரி பில்லிக்கம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், ஒன்னதலை கிராமத்தில், உறுப்பினர் கல்வி திட்ட நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து, 'கூட்டுறவு வங்கிகளில் கல்விக் கடன் வழங்கி வருவது குறித்தும், வங்கிகளில் கடன்களை பெற்று உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தினார். மத்திய கூட்டுறவு வங்கியின் கள மேற்பார்வையாளர் பால் முருகன், 'கடன்கள் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் கடன் எவ்வாறு பெறுவது,' என்பது குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, ஐந்து உறுப்பினர்களுக்கு, 4.90 லட்சம் ரூபாய் விவசாய கடன்களுக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் அய்யனார், மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் பொது மேலாளர் தேவராஜ் உட்பட பலர் பேசினர். 70 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்டபெட்டு 'இன்கோ' தேயிலை தொழிற்சாலை முன்னாள் தலைவர் மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை