மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
20 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
20 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
20 hour(s) ago
பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சியின், 14வது வார்டில் எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்ல வழி இல்லாத நிலையில், இவை அனைத்தும் நடைபாதையில் வழிந்தோடி வருகிறது.கழிவு நீரை மிதித்தபடி நடந்து செல்லும் பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இங்குள்ள குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் குடியிருக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.நடைபாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி, பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை இல்லை.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் ஆய்வு செய்து, கழிவு நீர் கால்வாய் அமைத்து, தண்ணீர் தேங்காமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago