உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலை பழங்குடியினர் தேன் சந்தைப்படுத்த ரூ. 4.87 லட்சம் நிதி

முதுமலை பழங்குடியினர் தேன் சந்தைப்படுத்த ரூ. 4.87 லட்சம் நிதி

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூடுதல் கலெக்டர் கவுசிக், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தனர்.கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது,''அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி அளித்துள்ள மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னுரிமை அளித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா, 5,030 ரூபாய் வீதம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில், 6 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து 1.6 லட்சம் ரூபாய் கல்வி மேம்பாட்டு நிதி உதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 33 பயனாளிகளை கொண்ட முதுமலை பழங்குடியினர் கூட்டு தொழில் குழுவினருக்கு, 4.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான தேன் சந்தைப்படுத்தல் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து, 224 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை