மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையத்தில் நுழைந்த சாரை பாம்பு
9 minutes ago
திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
11 minutes ago
முயலை வேட்டையாட சுருக்கு வைத்தவர் கைது
16 minutes ago
கோத்தகிரி;'கோத்தகிரியில் தனியார் 'பார்' ஆக்கிரமிப்பில் உள்ளதால், ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்,' என, வருவாய் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.கோத்தகிரி பஸ்நிலையம் -தாலுகா அலுவலக சாலையில், பழைய போலீஸ் ஸ்டேஷனை ஒட்டி, தனியார் 'பார்' மற்றும் ஹோட்டலுடன் அமைந்துள்ளது.இந்த குறிப்பிட்ட 'பார்', போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக புகார் எழுந்தது. வருவாய் துறையினர், மூன்று மாதங்களுக்கு முன்பு, போலீசார் முன்னிலையில், இருமுறை நில அளவை செய்து உறுதி செய்து, 'ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தெரிவித்தனர்.இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்நிலையில், கோத்தகிரி தாசில்தார் உத்தரவுப்படி நேற்று, வி.ஏ.ஓ., ராஜ்கமல், வருவாய் துறை உதவியாளர் அஜ்மீர் காஜா ஆகியோர் கட்டடத்தில் 'நோட்டீஸ்' ஒட்டினர்.
9 minutes ago
11 minutes ago
16 minutes ago