மேலும் செய்திகள்
செந்தமிழ் சங்க நிர்வாகிகள் தேர்வு
9 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
9 hour(s) ago
அம்பேத்கர் நகரில் சிறுத்தை உலா
9 hour(s) ago
ஊட்டி,:ஊட்டியில், சற்று மழை ஓய்ந்து இதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து குதுாகலமடைந்தனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்தது. மழையால் கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஊட்டியின் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் மற்றும் பிற சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த இரு நாட்களாக மழை சற்று ஓய்ந்தது. பகல் நேரங்களில் வெயில் தென்படுகிறது. ஊட்டியில் நேற்று நிலவிய இதமான காலநிலைக்கு கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணியர் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்து குதுாகலம் அடைந்தனர்.வார நாட்கள் என்பதால், பிற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago