உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விளையாட்டு குழுவுக்கு புதிய அலுவலகம் திறப்பு

விளையாட்டு குழுவுக்கு புதிய அலுவலகம் திறப்பு

பந்தலுார் : பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. செயலாளர் வின்சென்ட் ஜோய் வரவேற்றார். தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன், கவுன்சிலர் சேகரன் ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்தனர். விளையாட்டு சங்க தலைவர் அலி அஸ்கர் தலைமை வகித்தார்.பின்பு நடந்த கூட்டத்தில், ' நண்பர்கள் விளையாட்டு சங்கம் சிறந்த முறையில் செயல்படவும், தேவாலா சுற்று வட்டார பகுதி மக்கள் பயன் பெரும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுப்படும்,' என, முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், வியாபாரிகள் சங்க நிர்வாகி சாகீர், சமூக ஆர்வலர்கள் ஜெயக்குமார், வர்கீஸ், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிர்வாகி சைபுல்லா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ