மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
4 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
4 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
4 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
4 hour(s) ago
கூடலுார்;கூடலுார் தேவாலாவில் தொடரும் கனமழையால், பாண்டியார்-புன்னம்புழா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடலுார், தேவாலா, ஓவேலி, தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நிலத்தடி நீரும் உயர்ந்து வருவதுடன், நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பலத்த மழையின் போது, மழை வெள்ளம் சாலை மற்றும் விவசாய தோட்டங்களில் நுழைந்து பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.கூடலுாரில் உற்பத்தியாகி, குண்டம்புழா, நாடுகாணி வழியாக, கேரளா செல்லும் பாண்டியார் -- புன்னம்புழா ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வருவாய் அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் ஆறு மற்றும் அதன் கரைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago