உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

மரத்தில் மோதி அரசு பஸ் விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

கூடலூர்:மசினகுடி அருகே, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க, முயற்சித்த போது அரசு பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.கூடலுார் பஸ், பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசு பஸ் நேற்று காலை, 8:15 புறப்பட்டு பொக்காபுரம் நோக்கி சென்றது. பஸ்சை ஓட்டுனர் அந்தோணிகுரூஸ் ஒட்டி சென்றார். பஸ் காலை, 9:00 மணிக்கு மசினகுடி கடந்து, பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அவர்கள் மீது மோதாமல் இருக்க, ஓட்டுனர் முயற்சித்த போது சாலையோரம் இருந்த மரத்தில் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது.அப்போது, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பஸ்சில் பயணித்தவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். மசினகுடி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி