| ADDED : ஜூலை 10, 2024 12:35 AM
ஊட்டி;மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 26ம் தேதி காலை, 10:30 மணி அளவில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது.2024 மே, 31ம் தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்று, இதுவரை ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் கிடைக்க பெறாதவர்கள், தங்களது குறைகள் குறித்த விண்ணப்பங்களை, இரட்டை பிரிதிகளில் தயார் செய்து, மாவட்ட கலெக்டர் அல்லது கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு (கணக்குகள்) நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும், 15ம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.