உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பில்லுார் குடிநீர் குழாய் உடைப்பு; வாகன ஓட்டிகள் அவதி

பில்லுார் குடிநீர் குழாய் உடைப்பு; வாகன ஓட்டிகள் அவதி

பெ.நா.பாளையம் : கோவை-மேட்டுப்பாளையம் ரோடு மத்தம்பாளையம் அருகே பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, மத்தம்பாளையம் அருகே பதிக்கப்பட்டுள்ள பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து பெருகும் நீர், ரோடு முழுவதும் வழிந்து ஓடுவதால், வாகன ஓட்டிகள், குறிப்பாக, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சாலைகளில் சறுக்கி விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' கடந்த பல நாட்களாக பில்லூர் குடிநீர் வழிந்தோடி வருகிறது. இது குறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. பில்லூர் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் கசியும் இடங்களில் குழாயை செப்பனிட, பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டு, குடிநீர் வினியோகத்தை நிறுத்திய பிறகே பணிகளை மேற்கொள்ள முடியும் என, பில்லூர் குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி