| ADDED : மே 01, 2024 11:15 PM
அன்னுார் : கொப்பரை கொள்முதலுக்கு அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை : அன்னுார்-சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.அரவை கொப்பரைக்கு, ஒரு கிலோவுக்கு, 113 ரூபாய் 60 காசும், பந்து கொப்பரைக்கு ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை கொள்முதல் செய்ய வருகிற ஜூன் 10-ம் தேதி கடைசி நாள் ஆகும். விவசாயிகள் கொப்பரை கொண்டு வரும்போது சில்லுகள், மஞ்சள் பூசணம் மற்றும் தோல் சுருக்கம் இல்லாதவாறு தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விற்பனை கூட கண்காணிப்பாளர் 88834 53333, இளநிலை உதவியாளர் 94863 05152, வேளாண் உதவி அலுவலர் 99433 96618 ஆகியோரது மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.