| ADDED : ஆக 07, 2024 10:35 PM
ஊட்டி: ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரப்பினர் வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க, மாநில அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு, தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில், மூன்று லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, 10 பேர் கொண்ட, ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களில் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள், ஊட்டி பிங்கர் போஸ்ட், மாவட்ட கலெக்டர் கூடுதல் வளாகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.