உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடுதலாக குடிநீர் வழங்க கோரிக்கை

கூடுதலாக குடிநீர் வழங்க கோரிக்கை

சூலூர் : சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தேவையான குடிநீரை வழங்க முடியாமல் ஊராட்சி தலைவர்கள் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:புதுப்புது குடியிருப்புகள் உருவாகி உள்ளன. 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி தான் ஊராட்சிகளுக்கு தற்போதும் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது, கோடை காலம் என்பதால், கூடுதல் தண்ணீர் தேவை உள்ளது. ஆனால், வழக்கமாக வழங்கும் குடிநீரும் குறைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் கூடுதலாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை