உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய பாலம் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய பாலம் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்;கேரளா மாநிலம் புன்னம்புழா சாலியார் ஆற்று வெள்ளத்தில் பாலம் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுாரை ஒட்டிய, கேரள மாநிலம் மலப் புரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால், எடக்கரை நிலம்பூர் வழியாக செல்லும், சாலியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.எடக்கார பகுதியில் புன்னம்புழா - சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் நிலம்பூர் சாலையில் உள்ள பாலம் மூழ்கியது. இதனால், தமிழகம்- கேரளா போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆற்றில் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து, 2:30 மணிக்கு வாகன போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ