உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாறை உருண்டு போக்குவரத்து பாதிப்பு

பாறை உருண்டு போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி;கோத்தகிரி-ஊட்டி இடையே, கட்டபெட்டு பகுதியில் நேற்று அதிகாலையில் பெய்த கன மழையில் பாறை உருண்டு, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கட்டபெட்டு சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை, அதிகாலை வரை நீடித்தது. கோத்தகிரியில், 24 மி.மீ., கீழ் கோத்திகிரியில், 34 மி.மீ., கோடநாட்டில், 19 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையில், கட்டபெட்டு 'கார்ஸ்வுட்' இடையே, பாக்கிய நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் சாலையில் பாறை உருண்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள், வாகனங்கள் சென்றுவருவதற்காக பாறையை சாலை ஒரத்தில் ஒதுக்கி வைத்தனர். ஆனால், பகல், 12:00 மணிவரை பாறை முழுமையாக அகற்றப்படவில்லை. இதனால், குறிப்பிட்ட இடத்தில் வாகனங்கள் சிரமத்திற்கு இடையே இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி