உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குவிந்த 10 டன் கழிவு அகற்றிய துாய்மை பணியாளர்கள்

குவிந்த 10 டன் கழிவு அகற்றிய துாய்மை பணியாளர்கள்

ஊட்டி:ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஏப்., மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. நடப்பாண்டு தேர்திருவிழா இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. தேர் திருவிழாவுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியிடங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தந்தனர். திருவிழாவை ஒட்டி, வெளிமாவட்டம், வெளிமாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் நடைப்பாதையில் கடை அமைத்து வியாபாரம் செய்தனர். இதனால், மாரியம்மன் கோவில் வளாகம், ஐந்துலாந்தர், மெயின்பஜார், மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. மக்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்கள் ஆங்காங்கே வீசி சென்றதால், 10 டன் அளவுக்கு குப்பை கழிவுகள் தேங்கியது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீதரன் தலைமையில், 50 க்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மறுநாள் அதிகாலையில் வந்து, 10:00 மணிக்குள் குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர். இவர்களுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி