உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மேரீஸ் ஹில் சாலையில் லாரி பள்ளி மாணவர்கள் பாதிப்பு

மேரீஸ் ஹில் சாலையில் லாரி பள்ளி மாணவர்கள் பாதிப்பு

ஊட்டி;ஊட்டி மேரீஸ் ஹில் சாலையில் காலை, மாலை நேரங்களில் லாரி மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊட்டியில், பல பள்ளிகள் அமைந்துள்ள மேரீஸ் ஹில் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியரின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்த கூடாது. ஆனால், பல நேரங்களில் லாரி, பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் பயன்படுத்தும் இச்சாலையில், இரு சக்கர வாகனங்களில், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வரும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும், இச்சாலை வழியாக பள்ளிக்கு நடந்து வரும் மாணவர்கள் இடையூறுகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.பெற்றோர் கூறுகையில்,'மாணவர்கள் நலம் கருதி, சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணிக்கு போலீசாரை நியமிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை